பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய பேரூர் திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் தலைமை வகித்தார்.
விழாவில் பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு , துரைமுருகன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு உணவு இனிப்புகள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செல்வ முத்துக்குமரன், சிறுபான்மை பிரிவு நல உரிமை மாவட்ட அமைப்பாளர் அனிபா , ஒன்றிய துணைச் செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முபாரக் உசேன், மாவட்ட பிரதிநிதிகள் ராமபிரபு, அறிவழகன், மாவட்ட ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துமேரி மைக்கேல் ராஜ், தேன்மொழி உதயகுமார், சமீரா பர்வீன்,மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்