காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் அதிக அளவில் மக்கள் கூடும் பகுதிகளில் சிறுதானிய உணவுகளை பயன்படுத்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் உணவகங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிறுதானிய உணவகத்தினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் ராமஜெயம் மகளிர் சுய உதவி குழுவினர் முறையாக 15 நாட்கள் சிறு தானிய உணவு தயாரிப்பு பயிற்சியில் ஈடுபட்டு அதனை தொடர்ந்து இன்று உணவகத்தில் பணிகளை துவக்கினர்.காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த உணவகம் செயல்படும் எனவும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் சத்துள்ள சிறுதானிய உணவுகளை உண்ணும் வகையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும், மேலும் சிறுதானிய பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *