கரூர் செய்தியாளர் மரியான் பாபு

காந்திகிராமம் அரசு பள்ளி மாணவருக்கு சிறப்பு பரிசு

கரூர் மாவட்டம் செல்லாண்டிபட்டியில் குளோபல் ஏரோஸ்போர்ட் நடத்திய மாநில அளவிலான இயந்திரவியல் மற்றும் மாதிரி விமான வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் ஒன்பது வயது மாணவர் மெகதீஸ் பதக்கம் மற்றும் சான்றிதழை சிறப்பு பரிசாக பெற்றார்.

சிறப்பு பரிசு பெற்ற மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.பூ ங்கொடி,மற்றும் ஆசிரியர்கள் திலகவதி, மனோன்மணி, தமிழ்ச்செல்வி, ராமலட்சுமி,ரேவதி, சாந்தி, புவனேஸ்வரி, சுதா, அன்புக்கரசி மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ,மாணவிகள் அனைவரும் மாணவரை பாராட்டி வாழ்த்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *