தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா 2023 நடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் எஸ்.ஆனந்த் இ.கா.ப.முன்னிலையில் மாவட்டஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாரல் திருவிழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியதன் அடிப்படையில் .
மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

சாரல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக தள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மேடை அமையுள்ள இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை உள்ளாட்சி அமைப்பினர் விரைந்து சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தேவையான ஒத்துழைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள்.


முன்னதாக 13 வது உலக புலிகள் தின விழாவை கொண்டாடும் விதமாக சுருளி அருவி பகுதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு சுற்றுச்சூழல் அங்காடிகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். சுருளி அருவிக்கு செல்லும் சாலை , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது,மாவட்ட வன அலுவலர் சமர்தா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துமதி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் அண்ணாதுரை , சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாலாமணி கணேசன், வனசரகர் பிச்சைமணி சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவர்கள் கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *