தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்மாவட்டம்
திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருப்பத்தூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியின் புதிய கிளைகள் உருவாக்க வேண்டும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன் , ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாஸ்கரன், விமல், அண்ணாமலை, வார்டு செயலாளர் அரவிந்தன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..