ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி – வெள்ளையாபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு, தேவேந்திரர் இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் தளபதி ராஜ்குமார் தலைமையில்,
மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் மாநில பொதுச் செயலாளர் அழகேசன்,இளைஞர் அணி தலைவர் பிரவீன்ராஜ், நகர தலைவர் முனியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதே போல் பாஜக சார்பில் தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் மற்றும் அக்கட்சியினர் பலர் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்