மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஏறுதழுவு தல் அரங்கில் நடந்த சிறப்பு ஜல்லிக்கட்டுப் போட்டியை வெளிநாடுகளைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் உற்சாகமாக பார்த்து ரசித்தனர்.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள சர்வதேச ஹாக்கி அரங்கில் ஆடவர் ஜூனியர் உலகப் கோப்பை ஹாக்கி போட்டி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 12 வெளிநாட்டு ஹாக்கி அணிகள் பங்கேற்று வருகின்றன.


வெளிநாட்டு வீரர்களுக்காக தமிழர்களின் பாரம்பரியவிளை யாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் சிறப்பு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இதை காண தென் கொரியா, ஓமன், சீனா, கனடா. வங்கதேசம், ஆஸ்திரியா, எகிப்து. நமீபியா ஆகிய 8 நாடுகளை சேர்ந்த ஹாக்கி அணி வீரர்கள் அழைத்து வரப்பட்டனர். அனைவரும் தமிழ் கலாச்சாரத்தின்படி வேட்டி, வண்ண கலர் சட்டை, துண்டு அணிந்து பார்வை யாளர் கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

போலீசார், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களை தவிர பொது மக்கள் யாரும் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை. அமைச்சர் பி.மூர்த்தி, மாநக ராட்சி ஆணையர் சித்ரா. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சருக்கு வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் ஹாக்கி மட்டையை பரிசாக வழங்கினார்.

பின்னர், ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 104 காளைகள் களமிறக்கப் பட்டன. 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும். காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் பட்டன. போட்டியை தமிழ் நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரன் ஒருங்கிணைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *