துறையூரில் அஇஅதிமுக நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 9வது நினைவு தினம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நகர அஇஅதிமுக சார்பில் நகர கழக செயலாளர் அ.அமைதிபாலு தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி கலந்து கொண்டு முன்னாள் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அவை தலைவர் சமயபுரம் ராமு,முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், சி.வெங்கடேசன், ராம்மோகன், பேரூர் கழக செயலாளர்கள் ராஜாங்கம், ராஜேந்திரன்,பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன்,மாவட்ட அணி செயலாளர் வழக்கறிஞர் அன்புபிரபாகரன்,அவை
தலைவர் ரவிவர்மா,எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர், முன்னாள் நகர செயலாளர் கவிதை மணி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் கா. தீனதயாளன் (நகர்மன்ற உறுப்பினர்) , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி எம் சிவபொன்னன்,18வது வார்டு டாஸ்மாக் ராமு,மாவட்ட பிரதிநிதிகள் கண்ணதாசன், மருதமுத்து ,பொருளாளர் கருணாகரன், வழக்கறிஞர் கார்த்திகேயன், மைவிழி ,வர்த்தக அணி ராயல் பாஸ்கர், எம்ஜிஆர் இளைஞர் அணி விவேக், விவசாய அணி விஜயரங்கன், எம்ஜிஆர் இ.மா.து செயலாளர் வடிவேல், எம்ஜிஆர் மன்றம் ரவி,முத்து குமாரலிங்கம், அபி இளங்கோவன்,சிவசாந் மனோகரன்,ஐடி விங்க் தினேஷ் மற்றும் நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள்,வார்டு கழக செயலாளர்கள், பூத் கமிட்டி செயலாளர்கள்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் அணி ,ஐ டி விங் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்