டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம் பாபர் பள்ளி இடித்த 33 ஆண்டுகள் அநீதி அரங்கேறிய தினத்தை முன்னிட்டு SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில் அரசமைப்பு சட்ட முகவுரையை கையில் ஏந்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் தெற்கு மாவட்ட தலைவர் கே.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகம்மது சித்திக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.ஏ.கே கரீம் MBA.,LLB., அவர்கள் கலந்துக் கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார்.மேலும்,விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில செயலாளர் ஆலிமா. M.மெஹராஜ் பானு, திருச்சி மாநகர ஜமாத்துல் உலமா சபை செயலாளர் இமாம் M.அப்துல் ரஹீம் மன்பஈ, மற்றும் கத்தோலிக்க பொது நிலையினர் பேரவை தலைவர் ஆசிரியர் I.வேளாங்கண்ணி ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் திருவரம்பூர் தொகுதி தலைவர் Er.I. ஷேக் முகமது மற்றும் மேற்கு தொகுதி தலைவர் D.சையது முஸ்தபா, ஶ்ரீரங்கம் தொகுதி துணைத் தலைவர் திப்பு சுல்தான், ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *