சின்னமனூரில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

தேனி மாவட்டம் சின்னமனூர் ஐயப்பன் பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது சின்னமனூரில் ஐயப்பன் மணிமண்டபத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி ஒய்வெடுத்து செல்ல சின்னமனூரில் செயல்பட்டு வரும் ஐயப்பா சேவா சங்கமம் 50 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது

ஐயப்பா பக்த பஜனை சார்பில் ஆராட்டு விழா நடைபெற்றது முல்லைப் பெரியாற்றில் ஐயப்பா விக்ரகத்திற்கு ஆராட்டு விழா நடைபெற்றது ஐயப்ப சங்க மணிமண்டப நிறுவனர் கே எஸ் பெருமாள் மணிமண்டப குருசாமி இ. லோகேந்திர ராஜன் மற்றும் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் இதனைத் தொடர்ந்து லட்சுமி நாராயணா பெருமாள் திருக்கோவிலில் உள்ள நெல்லி மரத்திற்கு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இந்த விழாவையொட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை சைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *