அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அரியலூரில் உள்ள அவரது சிலைக்கு சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மாவட்ட தலைவர் முனியமுத்து தலைமையில் நடந்த விழாவில் மாநிலத் தலைவர் எம் குமார் மாவட்ட செயலாளர் சாமிதுரை மாவட்ட துணைச் செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பின்பு மாவட்ட தலைவர் முனியமுத்து மாவட்ட அமைப்பு செயலாளர் பழசுகுமாரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை அரியலூர் பிஎன்எம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது என்று செய்தியாளர்களிடம் கூறினார்