திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி மழை நீரில் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது இதனால் வரையும் வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிடையவில்லை , கணக்கெடுக்கவில்லை எனவும் வேளாண்துறை அதிகாரிகள் டிஜிட்டல் செயலி முறையில் கணக்கெடுப்பதை திரும்ப பெற வேண்டும். பழைய நடைமுறையில் கணக்கெடுத்தால் மட்டுமே அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.