தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் அ. மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது செயல் அலுவலர் சோ.ராஜேஸ் அய்யனார் முருகன் துணைத் தலைவர்மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தார்

இந்த கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து கண்காணித்திட தனி whatsapp செயலி உருவாக்கப்பட்டுள்ளது அலைபேசி எண் 9600018349. அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கிடைப்பதனை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவிப்பு பலகை நிறுவுதல் அனைத்து நிறுவனங்களிலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள்

பணிபுரிவதை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு அறிவிப்பு பலகை நிறுவுதல் அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்குவதை தடை செய்யும் பொருட்கள் விழிப்புணர்வு அனைத்து மதுபான கடைகள் மனமகிழ் மன்றம் நிறுவனங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மதுபானம் வழங்குவதை தடை செய்தல் தவறும் பட்சத்தில் மேற்படி நிறுவனங்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரை அபராதத்துடன் ஏழு வருட காவல் சிறை தண்டனை வழங்க ப்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள் அருகில் குறைந்தது 100 மீட்டர் போதை வாஸ்துக்கள் விற்பனை செய்வதை தடை செய்யும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் ஜெயகுமார் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *