தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை மனு வழங்கினாா்கள்.


தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயலால் கடந்தவாரம் தொடா்மழை பெய்தது. அதனால் பல்ேவறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு மழைநீர் தேங்கியது இதே ேபால் நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய வேண்டும் என்று மாநகரட்சி அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் தூத்துக்குடி மாவட்ட ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்து, நுழைவு வாயிலில் வாகனம் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தி தருமாறு வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மேயா் ஜெகன்பொியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேங்கும் மழைநீரை முழுமையாக அப்புறப்படுத்தி வருகிறோம் அதிலும் சில அரசு கட்டிடங்கள் பொதுப்பணித்துறை நிா்வாகத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி கூட்டத்தில் கூட பேசப்பட்டது. ஆனால் எங்களை பொறுத்தவரை வளா்ந்துவரும் மாநகராட்சி பகுதியில் நீதிமன்றம் வளாகம் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தான் பணியாற்றுகின்றோம் உங்களது கோாிக்கையும் நிச்சயமாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் வாரியார், துணை தலைவர் சிவசங்கர், துணை செயலாளர் பாலகுமார், பொருளாளர் கணேசன், செயற்குழு உறுப்பினா்கள் மணிகண்டன், பிரவீன்குமாா், தமிழ்செல்வி, ரமேஷ், முருகன், விக்னேஷ், மற்றும் மாநகராட்சி வழக்கறிஞர் தொல்காப்பியன் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மேயாின் நோ்முகஉதவியாளா் ரமேஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *