திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.நூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூலினை அறிமுக படுத்த, தலைவர் லால்குடி விஜயகுமார் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார். பொருளாளர் தாமோதரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சிவக்குமார், சந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.