மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி
யில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கழிப்பறை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை மாலா வரவேற்று பேசினார்.
மண்டல துணை வட்ட வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் சுகாதார ஒருங்கிணைப் பாளர் இளவரசி, கழிப்பறை பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி, அனைவரும் கழிப்பறை பயன்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு வலியுறுத்தினர்.
தூய்மை பற்றிய வினாக்களை கேட்டு, விடை அளித்த குழந்தை களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். ஆசிரியர் மோசஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மெர்சி, முராத்பானு, லதா, ரமா பிரபா மற்றும் ஷோபனா சிறப்பாகச் செய்திருந்தனர்.