குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2020 ஆண்டு திட்ட நிரலின்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் சார்பதிவாளர் நிலை II போன்ற தொகுதி II பணிகளுக்கும் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் போன்ற தொகுதி II A பணிகளுக்கு 25.10.2026 அன்று முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர். இளநிலை உதவியாளர். சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் போன்ற பணிகளுக்கு 20:12.2026 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group IV மற்றும் Group II & IIA தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு: குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதலின்படி 11.12.2025 அன்று வகுப்பு காலை 10.30 மணிக்கு கோவை மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு A. ஜோதிமணி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.சுரேஷ் அவர்கள் துவக்க உரை நடத்தினார். மாவட்ட திட்டமிடும் அலுவலகத்திலிருந்து.சண்முகராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.
இப்பயிற்சி வகுப்பிற்கு குண்டடம் ஊராட்சியை சார்ந்தோர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர் இப்பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் வியாழன் முதல் ஞாயிறு வரை காலை 10.30 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04212999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும், https//formsgleaxqFZG9PqCGvTx66 என்ற google link மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சியில் சேர்ந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர். மனிஷ் நாரணவரே அவர்கள் தெரிவித்துள்ளார்.