குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள்
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது அதன்படி வியாழக்கிழமை மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது . கூட்டத்திற்கு மேயர் ஜெகன் தலைமை தாங்கினார் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வைத்தார் கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் டாக்டர் சரோஜா. காந்திமதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் மேயர் ஜெகன் பேசுகையில் 938 மனு பெறப்பட்டு அதில் 08 மனு மட்டும் தான் தீர்வு காணப்படாமல் உள்ளது
மீதி 900 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது 16 17 18 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை பணியில் நடைபெற்று வருகிறது மழை பணி காலத்தில் வேலை நடைபெறவில்லை தற்போது பணி விரைவில் நடைபெற உள்ளது 100க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்படாமல் உள்ளது அந்தப் பணிகள் ஆரம்பமாக உள்ளது
பக்கீல் ஓடை விரிவாக்கம் செய்யப்பட்டு தண்ணீர் சென்றதால் பாதிப்பு இல்லை வக்கீல் ஓட கருத்தில் கொண்டு கூடுதலாக ஐந்து மீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய உள்ளது. ராஜாஜி பூங்கா நடைப்பயிற்சி விரிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது
தற்போது அங்கு உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது திறந்தவெளியில் அதுபோல எம்ஜிஆர் பூங்காவிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது பெண்களுக்கான மகளிர் பூங்காவில் ஜிம் ஏற்கனவே உள்ளது. எந்த புகாராக இருந்தாலும் ஆன்லைனிலும் புகார் அளிக்கலாம் நேரிலும் கொடுக்கலாம் தற்போது புதியதாக போடப்படுகின்ற கண்கள் எல்லாம் மூடி போடப்பட்டு தான் கான் போடப்படுகிறது
அது வசதியாக உள்ளது கொசு தொல்லை இருக்காது ஆனால் தற்போது சண்முகபுரம் 31 32 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கான்கள் மூடியுடன் அமைக்கப்பட உள்ளது தருக குளத்தில் 28 எம்டி கழிவுநீர் சென்று கொண்டுள்ளது வரும் காலத்தில் ஆலைகளுக்கு அந்த தண்ணீர் வழங்கப்பட உள்ளது குப்பைகளை பொதுமக்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும் தெப்பக்குளம் பிரச்சனை பற்றி எந்த ஒரு கவலையும் வேண்டாம் பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து தான் பணிகள் சீரமைக்கும் வேலைகள் நடைபெற்று வந்தது
தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரில் மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்களின் கோரிக்கை எடுத்து அங்கு தேங்கி இருந்த நீரை அப்புறப்படுத்தப்பட்டது அதன் அடிப்படையில் மழை நீர் செல்லும் வகையில் இரண்டு பைப் லைன் போடப்பட்டிருந்தது கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அந்த பைப்லைன் வழியாக காற்று உள்ளே சென்று தெப்பக்குளம் நடைபாதை பாதிக்கப்பட்டுள்ளது விரிசல் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் பழமை மாறாமல் அப்படியே சீர் அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார்