ஆளுநர்‌ தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல்‌ செய்தியில்‌ கூறியிருப்பதாவது:மேல்மருவத்தூர்‌ ஆதிபராசக்தி சித்தர்‌ பீடத்தின்‌
நிறுவனர்‌ ஆன்மீக குரு பங்காரு அடிகளார்‌ உடல்‌நலக்குறைவால்‌ நேற்று காலமானார்‌ என்ற செய்திபெரும்‌ மனவருத்தத்தைத்‌ தருகிறது.பெண்கள்‌ எல்லா நாட்களிலும்‌ சிலையைத்‌தொட்டு வழிபாடு செய்யும்‌ முறையை அறிமுகப்படுத்தி பெண்களின்‌ சமூதாய முன்னேற்றத்தில்‌ பெரும்‌ புரட்சியை செய்தவர்‌. கல்வி நிறுவனங்கள்‌,மருத்துவமனைகள்‌, வழிபாட்டுத்‌ தலங்கள்‌, தொண்டுநிறுவனங்கள்‌ நிறுவி ஆன்மிகம்‌ மற்றும்‌ சமூக சேவைஆற்றியதன்‌ மூலமாக கோடான கோடி மக்களின்‌ நன்மதிப்பைப்‌ பெற்றவர்‌.அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவருடைய இழப்பு ஆன்மீக, சமுதாய வரலாற்றில்‌ஒரு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தக்‌ கூடும்‌.அவரை இழந்து வாடும்‌ குடும்பத்தினர்‌, நிர்வாகிகள்‌,பக்த கோடிகள்‌ அனைவரோடும்‌ என்னுடையவருத்தத்தையும்‌ ஆறுதலையும்‌ பகிர்ந்து கொள்கிறேன்‌.அவருடைய அன்மா அமைதி பெற எல்லாம்‌ வல்லஇறைவனை வேண்டுகிறேன்‌. இவ்வாறு அவர்‌ கூறியுள்ளார்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *