வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து முன்னேச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) பிரகாஷ் தலைமை வகித்தார், ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் முன்னிலை வகித்தார்,இதில் டெங்கு காய்ச்சல் நோய் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது,

டெங்கு கொசுக்கள் பரவக்கூடிய வளாகங்கள், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கொசு உற்பத்தியாக கூடிய டயர்கள், உபயோகமற்ற தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை துரிதமாக அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, பாதுகாக்கப்பட்ட குளோரிநேஷன் செய்யப்பட்ட குடிநீர் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், அரித்துவாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *