பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது கவியரங்கத்தலைமை ஏற்று வலங்கைமான் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் பாரதி கண்ட கனவு என்ற தலைப்பில் கவியரங்கத்தை நடத்தினார்.
கவியரங்கத்தில் கும்பகோணம் செல்லதுரை சோ மோகன் திருவிடைமருதூர் இளைய தீபன் பட்டீஸ்வரம் சண்முகம் மதுரை அர்ஜுனன் மதுரை முத்து விஜயன் ராஜபிரபா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்து கொண்டு பாரதியின் புகழை நிகழ்வு ஏற்பாடுகளை கழுகுமலை பாலசுப்பிரமணியம் செய்திருந்தார்.
நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான கவிஞர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களின் உடைய கலை நிகழ்ச்சிகள் பேச்சுப்போட்டி ஓவிய போட்டி மாறுவேட போட்டி போன்றவை நடைபெற்றன.