பள்ளி கல்வித்துறை மற்றும் போக்குவரத்து சாலைப் பாதுகாப்பு வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் பள்ளி வாகன மேலாளர்கள் ஓட்டுநர் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் போக்குவரத்து சாலைப் பாதுகாப்பு துறை வட்டார போக்குவரத்துத்துறை இணைந்து நடத்தும் பள்ளி வாகன மேலாளர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களும், ஓட்டுநர்களுக்கு உரிய சீருடையான. காக்கி சட்டையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று அனைவரும் பின்பற்றுவது பாராட்டக்கூடிய விஷயமாகும் பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளை விட அவர்கள் பெற்றோர்களே பயத்துடன் இருப்பார்கள் பெற்றோர்களின் கவலையினை போக்கும் விதமாக நீங்கள் முறையாக சாலை விதியினை பின்பற்றி செல்ல வேண்டும் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு செயல்பாடு கேமரா செயல்பாடு, முதலுதவி குறித்த கருவிகள் அனைத்தையும் சரியாக பராமரித்து கண்காணிக்க வேண்டும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பள்ளி வாகனங்களின் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதை உடனடியாக. பள்ளி நிர்வாகத்தில் தெரிவிக்க வேண்டும் பள்ளி நிர்வாகமும் அவர்கள் கூறும் குறைகளை அலட்சியம் படுத்தாமல் உடனடியாக நிவர்த்தி செய்து தரவேண்டும் ஓட்டுநர்கள் ஒருபோதும் வேக. கட்டுப்பாட்டினை மீறி செல்லக்கூடாது குறிப்பாக பள்ளி பேருந்தில் உள்ள குழந்தைகளை நினைவிற் கொண்டு செல்ல வேண்டும் நமது மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை இனியும் நடைபெறக்கூடாது அதற்கு தங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
விழிப்புணர்வு முகாமில் பள்ளி வாகன மேலாளர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் என 350 நபர்கள் பங்கேற்றனர்
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மாயகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *