ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் குறிச்சி-சிக்கல் நாயக்கன்பேட்டை இணைப்பு பாலம்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் குறிச்சி, சிக்கல் நாயக்கன் பேட்டை மண்ணியாற்று பாலம் குறுகிய நிலையிலும் போக்குவரத்துக்கு அச்சம் இருந்த நிலையில் பாலத்தின் இரு புறங்களிலும் கைப்பிடி சுவர்கள் தண்ணீர் அறித்து அடித்து செல்லப்பட்டதால் பயணம் செய்யும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் அச்சம் அடைந்து வந்த நிலையில்
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் குறிச்சி மற்றும் சிக்கல் நாயகன் பேட்டை கிராமத்தை இணைக்கும் மன்னியாற்று இணைப்பு புதிய பாலம் நபார்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய பாலம் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த்,உதவி செயற்பொறியாளர் விஜய ரகுநாத்,வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி,கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தனி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன்உதவி பொறியாளர்கள் கருணாநிதி ரவி கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முன்னதாக லட்சுக்குடி கன்னாரகுடி தார் சாலை அமைத்தல் பணி,சிமெண்ட் சாலை பணிகள்,
கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் பொது வினியோக கட்டிட முழுமைபணிகள்,செருகுடி ஊராட்சியில் கீழ காட்டூர் புழுதிகுடி சாலையில் மண்ணியாற்று பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *