தென்காசி மாவட்டம்
சுரண்டை அருகே வீராணத்தில்  நியாய விலை கடையில் ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது வறட்சி நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தார்.

தென்தமிழகத்தில் கடந்த 17ஆம் தேதி ஒரே நாள் இரவில் பெய்த கனமழையால் தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரும் பேரழிவை சந்தித்தது.நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களது உடைமைகளையும்,வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை காப்பாற்றினார்கள். வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூபாய் 6000 நிவாரண தொகையும், கன்னியாகுமரி,தென்காசி மாவட்டத்திற்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார் .இந்த நிலையில் நேற்று தென்காசி மாவட்டம், வீராணத்தில் உள்ள நியாய விலை கடையில் ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது  வறட்சி நிவாரணம் ரூபாய் ஆயிரம் வழங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பாலசுப்ரமணியன்,

மாவட்ட ஓட்டுனர் அணி துணைஅமைப்பாளர் 

அமானுல்லா,ஒன்றிய இளைஞரணி அன்சார் அலி, பூலோகராஜ் ,நியாயவிலை கடை பணியாளர் சண்முகம்
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *