உழவன் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி அமைத்திட கோரி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு.

பா.ஜ.க. மாநில தலைவர்
அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வருகை தந்தார். அப்போது இந்து மக்கள் கட்சி மாநில பொது
செயலாளர் குருமூர்த்தி நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணத்திலிருந்து சென்னை வரை செல்லும் ரயில் வண்டி எண்.16866 உழவன் எக்ஸ்பிரஸ், அதேபோன்று சென்னையிலிருந்து கும்பகோணம் வரும் வண்டி எண். 16865 உழவன் எக்ஸ்பிரஸ் அதிகாலை வேளையில் சென்றடைவதால், ரயிலில் பயணம் செல்பவர்களுக்கு சிரமமாக உள்ளது. மேற்கண்ட உழவன் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி அமைத்திடவும்,

காலை 11.30 மணியளவில் சென்னை செல்வதற்கு ரயில் வண்டி உள்ளது. அதன்பிறகு இரவு 10.00 மணிக்கு மேல்தான் ரயில் போக்குவரத்து உள்ளது. எனவே மாலை நேரத்தில் 4.00 மணி முதல் 5.00 மணிக்குள் மேலும் ஒரு ரயில் இயக்கப்பட்டால் பயணிகளுக்கு பயனள்ளதாக அமையும் எனவும்

கும்பகோணத்திலிருந்து பழனி மற்றும் திருவண்ணாமலை ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய ஏதுவாக கும்பகோணம் முதல் பழனி வரை தொடர் வண்டியும், அதேபோல் கும்பகோணம் முதல் திருவண்ணாமலை வரை தொடர் வண்டி இயக்கப்பட்டால் பயனுள்ளதாக அமையும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை மனுவை பெற்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தார்.

சந்திப்பின் போது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *