அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பரணம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம் நடும் விழா நடைபெற்றது ,

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார் இதில் இரும்புலிகுறிச்சி உதவி காவல் ஆய்வாளர் செல்வகுமார், செந்துறை ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா மதியழகன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் காரல்மார்க்ஸ் மற்றும் காவேரி கூக்குரல் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், அரியலூர் மாவட்ட ஈஷா நர்சரி பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நடவு செய்தனர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாளான டிசம்பர் 30 தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக 2,04350 டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தனர்.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நாற்று பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு டிம்பர் மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *