திருச்சி-சவுதி ஜித்தா நேரடி விமானம் இயக்க வேண்டும்

இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை

இஸ்லாமியர்களின் ஹஜ் – உம்ரா கடமைகளை நிறைவேற்ற திருச்சி-சவுதி ஜித்தா நேரடி விமானம் இயக்க வேண்டும் என இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஜே.ஜாஹிர் உசேன் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி விமான நிலையம் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது கடந்த 10 ஆண்டுகளில் புதிய சேவைகள் மற்றும் பயணிகள் போக்குவரத்தின் அறிமுகம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறைய வளர்ச்சியைக் கண்டுள்ளது. புதிய முனையம் மேலும் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.951 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட புதிய முனைய திறப்பு விழா வருகிற ஜன.2-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, மேலூர், ராமநாதபுரம் மற்றும் பல்வேறு கிராமபுற பகுதியிலிருந்து திருச்சி புதிய விமான நிலையம் ஒரே சமயத்தில் 4,000 சர்வ தேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள வசதியை கொண்டுள்ளது.

இதனையடுத்து தற்போது ​​தமிழகத்தில் இருந்து ஹஜ் மற்றும் உம்ரா புறப்பட சவுதி – ஜித்தா இயக்கம் இல்லாததால், கொச்சியில் இருந்து மட்டுமே பயணிகள் பயணம் செய்வதால்
வயது முதிர்ந்தவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தமிழ்நாட்டின் மையமாக திருச்சி இருப்பதால் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

டாடா ஏர் இந்தியா மற்றும் பிற ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்குவது
தற்போதுள்ள குறுகிய செயல்பாட்டு விமானம் தென் அரேபியாவின் ஜித்தா மற்றும் அருகிலுள்ள நகரங்களில் வசதியாக தரையிறங்க முடியும்.

சிறுபான்மையினரின் ஹஜ்-உம்ரா கடைமைகளை நிறைவேற்ற திருச்சி- சவுதி – ஜித்தா விமானத்தை நேரடியாக இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பிரதமர் மோடி அவர்களை வலியுறுத்தி கேட்டுக்
கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *