சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களை ஏமாற்றி நூதன முறையில் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் அங்கு வருபவர்களை ஏமாற்றி மர்ம நபர் ஒருவர் பணம் திருடி வருவதாக சீர்காழி மற்றும் திருவெண்காடு காவல் நிலையங்களில் புகார் வந்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் முதல் கட்டமாக ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அந்த நபர் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் இனியவன் என்பதும் இவர் ஏடிஎம் இயந்திரங்களுக்கு வரும் முதியோர்கள் மற்றும் பணம் எடுக்கத் தெரியாதவர்களை குறிவைத்து அவர்களை நூதன முறையில் ஏமாற்றி பணம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது முதலில் சீர்காழி பகுதியில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் பணம் போட வந்த முதியவரை ஏமாற்றி ரூபாய் 18 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டதும்.

இதேபோல் சீர்காழியை அடுத்த கீரா நல்லூர் பகுதியை சேர்ந்த அமுதா என்பவரை நூதன முறையில் ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.13700 ரொக்கத்தை எடுத்ததும் தெரிய வந்தது.

மேலும் இதே போல சீர்காழி திருவெண்காடு வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏடிஎம் எந்திரங்களை பயன்படுத்தி இதுவரையில் 2 லட்சம் எடுத்துக் கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் , குற்றவாளி இனியவனை சீர்காழி ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *