மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு,சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.

மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு
நெறியாளர் வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், தூய்மைப் பணியாளர் களின் நலன் கருதி அப்பணியாளர்களின் வாரிசுகள் மாற்றுத் தொழிலுக்குசெல்வதை வலியுறுத்தி சில வாய்ப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

அவ்வப்போது அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தகுழுவினரோடு திருச்சி தொன் போஸ்கோ வழிகாட்டி மையமும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டனர்..

பலதனியார் நிறுவனங்களின் துணையுடன் வேலைவாய்ப்பு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதுவரை 186 இளையோர் இந்த முயற்சியின் விளைவாக பல்வேறு பணி வாய்ப்புக்களை பெற்று
பலனைடந்துள்ளனர். மதுரை வாழைத் தோப்பிலுள்ள ஐடியாஸ் மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டனர். அதில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகளை வாங்கி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *