“செய்தி ஜீவா செந்தில் “


குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் மனவளக்கலை மன்றத்தின், பதினாறாவது ஆண்டு துவக்க விழா, தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது, மன்றசெயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். விழாவில், ஆழியார், உலக சமுதாய சேவா சங்க, இயக்குனர் அருள்ஜோதி. உரையாற்றினார்,

சென்னை கூடுவாஞ்சேரி துவக்கப்பட்ட இயக்கம் உலகெங்கும் 30 நாடுகளில் பரவி சேவை ஆற்றி வருகிறது,,மனித வாழ்க்கையில் உலகெங்கும் வாழும் மக்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை,இதற்கான ஒரு பயிற்சியை தான், வேதாத்திரி மகரிஷி ஆராய்ந்துவழிகாட்டினார். அந்த வழியில் யோகாபயிற்சி, தியானம், உள்ளிட்ட ஒரு கல்வி நிறுவனமாக இதை உருவாக்கினார். அதுவும் எளிமையான பயிற்சியாகவும் மகரிஷிஉருவாக்கினார்.

அதைப் பரப்பு வகையில் 150 நிறுவனங்களையும் 40 ஆண்டுகளில் நிறுவி கிராமங்கள் தோறும், நகரங்களிளும் மையங்களை அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியும் தியானமும், உணவு பழக்கமும் வாழ்க்கையை செமையாக்குகிறது. கடந்த காலங்களில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இருந்தது, தற்போது அவசர கால உலகில் மதிப்பெண் அடிப்படையாகக் கொண்டதால், விளையாட்டும் மீதி போதனை வகுப்புகளும் குறைந்து போனது, இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

மனிதர்கள் தம்மை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு மற்றவர்களை பற்றிசிந்திப்பதனால், ஏக்கத்தில் பாதியையும், தூக்கத்தில் பாதியையும், வாழ்க்கையில் தொலைக்கிறார்கள், இதனால் பலருக்கு மன உடல் ரீதியான தீமைகள் பெருகி வருகிறது. எனவே யோகா பயிற்சியும், தியான பயிற்சியும்செய்து உடல் உள்ள ஆரோக்கியத்திற்கு, கொண்டு வரவேண்டும்.மனித சமூகத்தில், நான்கு வயது முதல் மன அழுத்தம் தொடங்கி விடுகிறது.

34 வயதில் அதிகரிக்கிறது. நம்மில் பல பேரும் மன அழுத்தத்தால் பாதித்துள்ளோம். எனவேயோகாசனத்தையும் தியானத்தையும் கடைபிடிக்க வேண்டும், என இயக்குனர் ராஜேந்திரன் பேசினார்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் பழனி, வடலூர் செவன்த்டே , ஈடன் மேல்நிலைப் பள்ளி நிர்வாக இயக்குனர்.
தீபக் தாமஸ்,விழுப்புரமண்டலத்தலைவர் ரவிச்சந்திரன். மண்டல பொருளாளர் ஏழுமலை, மண்டல துணைத்தலைவர் ராசேந்திரன்,வக்கீல் இளைய பெருமாள்,பொருளாளர் துளசிநாத்உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நடராஜன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *