மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 70, மாநகராட்சி 6 வது வார்டு பகுதியில்
“என் வாக்­குச்­சா­வடி வெற்றி வாக்­குச்­சா­வடி” பரப்புரை.

“தமிழ்­நாடு தலை­கு­னி­யாது – என் வாக்­குச்­சா­வடி வெற்றி வாக்­குச்­சா­வடி” பரப்­பு­ரை­யின் முதல் கட்­ட­மாக 68,463 வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும் சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்­தின்­போது (SIR) தி.மு.க .வாக்­குச்­சா­வடி குழு உறுப்­பி­னர்­கள் 6.8 லட்­சம் பேர் BLO மற்­றும் வாக்­கா­ளர்­க­ளுக்கு உத­விட கழ­கத் தலை­வர் – முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் அறி­வு­றுத்­தி­ யி­ருந்­தார்.


பரப்­பு­ரை­யின் இரண்­டாம் கட்­டம். அடுத்த 30 நாட்­க­ளுக்கு மாநி­லம் தழு­விய தீவி­ர­மான பரப்­பு­ரை­யாக மேற்­கொள்­ளப்­பட இருக்­கி­றது.மேலும், தமிழ்­நாடு முழு­வ­தும் டிசம்­பர் 10 முதல் ஜன­வரி 10 வரை, பகுதி/ ஒன்­றி­யம்/நக­ரம்/பேரூர் கழக செய­லா­ளர்­கள் 68,463-க்கும் மேற்­பட்ட வாக்­குச் சாவ­டி­க­ளுக்­குச் சென்று 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் அந்­தந்த வாக்­குச்­சா­வடி அள­வில் வெற்றி பெறு­வ­தற்­கான உத்­தி ­களை வகுக்க பயிற்­சி­ய­ளிக்­கப்­
பட்­டுள்­ள­னர்.


இது­வரை எந்­த­வொரு கட்­சி­யும் செய்­யாத வகை­யில் 1900 மேற்­பட்ட பகுதி / ஒன்­றி­யம் / நக­ரம் / பேரூர்க் கழ­கச் செய­லா­ளர்­க­ளு­டன் – 78 கழக மாவட்ட செய­லா­ளர்­கள், 33 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், 124 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் மாநில, மாவட்ட குழு உறுப்­பி­னர்­கள் குழு­வா­னது 30 நாட்­க­ளில் 68,463 வாக்­குச்­சா­வ­டி­க­ளை­யும் நேர­டி­யாக பார்­வை­யி­டும் வகை­யில் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், 6.8 லட்­சம் தி.மு.க பூத் கமிட்டி உறுப்­பி­னர்­களை உற்­சா­கப்­ப­டுத்­த­வும், அணி­தி­ரட்­ட­வும் பரப்­புரை வடி­வ­ மைக்­கப்­பட்­டுள்­ளது.

கழ­கத் தலை­வர் – முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் , ஒவ்­வொரு பூத்­தி­லும் தெரு­முனை கூட்­டங்­கள், வீடு வீடா­கச் சென்று கலந்­து­ரை­ யா­டல்­கள் மற்­றும் வாக்­கா­ளர் சரி­பார்ப்பு இயக்­கங்­கள் மூலம் அடித்­தட்டு அள­வில் கழக்­கத்­தி­னரை ஈடு­ப­டுத்தி வாக்­குச்­சா­வடி பலப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும், முன்­னோடி தலை­வர்­கள் உட்­பட அனைத்து தி.மு.க. நிர்­வா­கி­க­ளும் 2021 சட்­ட­மன்ற தேர்­தலை விட கூடு­தல் வாக்­கு­களை தங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் பெறும் வகை­யில் தங்­க­ளது வாக்­குச்­சா­வ­டி­களை பலப்­ப­டுத்தி வெற்றி வாக்­குச்­சா­வ­டி­யாக மாற்­றிக்­காட்ட வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தி­னார். மேலும், வாக்­குச்­சாவடி குழு உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் போர்க்­கால அடிப்­ப­டை­யில் SIR பணி­க­ளில் ஈடு­பட வேண்­டும் என்­றும் கேட்­டுக் கொண்­டார்.

அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி 6 வது வார்டு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்,என் வாக்­குச்­சா­வடி வெற்றி வாக்­குச்­சா­வடி” பரப்­பு­ரையில் பங்கேற்று கடந்த கால தேர்தலில் பெற்ற வாக்குகள் தொடர்பான முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி பாகம் 70 ல் வார்டு எண் 6 ல் உள்ள பூத் கமிட்டியாளர்களுடன் கலந்துரை யாடினார். நெசவாளர் சங்க நிர்வாகி சோலையப்பன், தொகுதி பொறுப்பாளர் , பகுதி செயலாளர், வட்ட செயலாளர் மற்றும் பாக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *