அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம் அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஓய்வூதியர் தினம் அரியலூரில் கொண்டாடப்பட்டது
மாநில துணைத்தலைவரும் சங்கத்தின் மாவட்ட தலைவருமான இரா முருகேசன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் திருமானூர் கணேசன் முன்னிலை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர் ஆர் கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார் வருகிற 6ம் தேதி 6 1 2026 அன்று அரியலூரில் நடைபெறும் மாநில செயற்குழு சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது
அரியலூர் வட்டத் தலைவர் தங்கராசு அனைவருக்கும் நன்றி கூறினார் சங்கத்தின் மூத்த முன்னோடிகள் நகரா மற்றும் நாராயணன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது
வட்ட துணைத் தலைவர் அன்புச்செல்வன் திருமானூர் ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி மரியம்மாள் ஜெயங்கொண்டம் கலியபெருமாள் ராஜேந்திரன் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் முத்துராஜ் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்