மதுரையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம்…..
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம் மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் பாண்டியராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
சிறப்பு விருந்தினர் களாக இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் திருமதி நிஷாந்தி மற்றும் கிளை மேலாளர் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கொட்டாம்பட்டி. சுபாஷ், வட்டார இயக்க மேலாளர் ராமு, வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து இம்முகாமில் தொழில் மைய ஆய்வாளர் பேசுகையில் தமிழ்நாடு
தொழில் முனைவோர் திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூபாய் 10 லட்சம் அதில் 25 சதவீதம்
மானியமாகவும் கூடுதல் மானியம் ரூ 2 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும் வியாபாரம் சேவை உற்பத்தி போன்ற தொழில்களில் ஆர்வம் காட்டும் பெண்களுக்கு வயது 18 முதல் 55 வரை இருத்தல் வேண்டும் கல்வித் தகுதி தேவை யில்லை என்றும் போன்ற பல்வேறு விபரங்களை எடுத்துக்கூறினார்.
இக்கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணியாளர்கள் உட்பட ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.