மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தில் கழிவறை கட்டி திறப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை லைப் போட் பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கழிவறை கட்டி திறந்து வைக்கப்பட்டது.
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு
நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் மூலம் கட்டித் தரப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி மதுராந்தகம் கல்வி மாவட்ட அலுவலர் விஜயன் ஆகியோரின் வழிகாட்டுதல் படி நிகழ்ச்சி திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் லைப் போட் பவுண்டேஷன் கண்ணன் ஜெகநாதன் ஐயப்பன் அமர்நீதி பிரியங்கா கார்த்திக் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மெசல்னஸ் ஜெர்ரி வினட்டா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் தூதுவர் தணிகைவேல் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சித்தார்த்தன் பள்ளி மேலாண்மை குழு தலைவி வடிவுக்கரசி சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.