அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் படுகாயத்துடன் மீட்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் காந்திநகர் பகுதியில் சமூக காடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றது.

சமூக காட்டில் இருந்து வெளியேறிய இரண்டு வயதுள்ள புள்ளி மான்,
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளது. அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் படுகாயமடைந்தது இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அச்சிறுபாக்கம் வனச்சரகத்தில் இருந்து வனத்துறையினர் சென்று,மானை மீட்டனர்பின், அச்சிறுபாக்கம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *