செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் எம்ஆர்எச் சாலையில் டாக் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பள்ளியின் சார்பில் வருடாந்திர கட்டணம் ஒரு வருடத்திற்கு 16 ஆயிரம் ரூபாய் உயர்த்தினர் திடீரென கட்டண உயர்வால் அதனை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர் .
நிர்ணயித்த கட்டிடத்தை விட 16 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் எனவும் அதனை மூன்று தவணையாக செலுத்த வேண்டும் எனவும் கூறியதன் பேரில் பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர் .
இந்த நிலையில் ,கடந்த இரு நாட்களுக்கு முன்பு பள்ளியின் பயிலும் நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி . கொடுப்பதாக கூறியதின் பேரில் இதனை எதிர்த்து பெற்றோர்கள் போர்கொடி தூக்கினர்
தொடர்ந்து இதே போல் போராட்டம் வளர்ந்து வந்த நிலையில் நேற்று காலையில் இருந்து பள்ளியின் உட்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தரையில் அமர்ந்து வருடாந்திர கட்டணத்தை குறைக்கக்கவும் டி.சி கொடுத்த மாணவர்கள் நான்கு பேரை மறுபடியும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கோஷமிட்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியதின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சத்யன் தலைமையில் , அசம்பாவிதம் ஏதும் நடைபெறாதவாறு அங்கு புழல் இன்ஸ்பெக்டர் சரவணன் மாதவரம் இன்ஸ்பெக்டர்