செங்குன்றம் செய்தியாளர்
தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் தலைமை கிளையின் சார்பாக பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர் தின விழா நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது ஊதிய கமிஷனில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பென்ஷனர்களுக்கு பொருந்துமா என்பதை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஒன்றிய அரசின் பாகுபாட்டை நீக்க வேண்டும்.
பென்ஷனர்களுக்கு வயது வரம்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2026 ஜனவரி முதல் 10 சதவீதம் இடைக்கால நிவாரண தொகை தரப்பட வேண்டும்.
பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய மருத்துவ வசதி அளித்து மாத மாதம் உரிய முறையில் மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்த பென்ஷனர் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சதன் ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் கோட்டத் தலைவர் பிரான்சிஸ். மண்டல செயலாளர் உதயசங்கர். கிளை தலைவர் விஜயன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.