தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், டிச- 18.
தஞ்சையில் உள்ள அடைக்கல அன்னை சபையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய சமூகத்தினர்கள் கலந்து கொண்டு பல் சமய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் விழாவை நடத்தினார்கள்.
இயேசு கிறிஸ்து பிறப்பை டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர் வெளிநாடுகளில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே கிறிஸ்துவின் பிறப்பின் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் உலகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களும் கிறிஸ்துவின் பிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் வீடுகள் தோறும் “கேரல்ஸ்” கிறிஸ்துவின் ஆராதனை பாடல்கள் பாடி கிறிஸ்து பிறப்பு குறித்து நற்செய்தியையும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் அருளானந்த நகர் பகுதியில் உள்ள அடைக்கல அன்னை சபையில் பல் சமய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய மத நல்லிணக்க அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு அடைக்கல அன்னை சபையின் சபை தலைமை அன்னை மரிய பிலோமி தலைமை வகித்தார். மாநில தலைமை சகோதரி ஜெசிந்தா மேரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக
சென் பீட்டர்ஸ் சபையின் தலைமை குரு பீட்டர் ரெத்தினம், தொன்போஸ்கோ மெட்ரிக் பள்ளி தாளாளர் சுரேஷ், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் தலைவர் விமூர்த்தானந்தர், சிறுபான்மை மக்கள் நல்குழு துணை தலைவர் ஜாகிர் உசேன், இடதுசாரிகள் பொதுமேடை செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்தும், சமூக நல்லிணக்கம், மனிதநேயம் குறித்தும் சிறப்புரை வழங்கினர்.
முடிவில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் சகோதரி விக்டோரியா கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளர்கள் பேசியது பற்றி விளக்கமாக எடுத்துரைத்து அனைவருக்கும் நன்றி கூறி பேசினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கிறிஸ்மஸ் பாடல்கள் அடங்கிய குழு நடனம் மற்றும் நாடகம் நடைபெற்றது. சபையின் வெளிப்புற வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.