கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனா முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்புவிழா ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் முத்தவல்லி ஹாஜி கமாலுதீன் சாஹிப், பாலக்காடு ஜாகீர்சகாப், மதராஸா கமிட்டி தலைவர் மனாப், டெய்லர் அலி, பொருளாளர் பாஷா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

இவ்விழாவில் ஹஸனுல் புகாரி அசகாபி வாரணக்கார தங்கள், பாலக்காடு ஜாபிர் சகாபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர் அதனைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது மேலும் வால்பாறை பள்ளிவாசல் கம்பி பணிக்கு நிதிஉதவி அளித்த அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது

வெசிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சின்கோனா முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முத்தவல்லி செய்னுதீன், தலைவர் மொய்தீன், செயலாளர் காஜா மொய்தீன், பொருளாளர் சுபைர், நசீர், அப்பாஸ், தாஜுதீன், மஸ்தான் அசீஸ், ஹக்கீம், நெஜுமுதீன் மற்றும் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *