பரமத்திவேலூர் நன்செய் இடையாறு செல்லும் சாலையில் காமராஜர் திடலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெரு முனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ்பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா, பேரூர் அவைத்தலைவர் மதியழகன்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தனகரன்,மாவட்ட பிரதிநிதி சௌந்தரராஜன்,அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தலைமைக் கழக பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்து கொண்டு தமிழக அரசால் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம்,பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார்.

அப்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும். அதற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் உதயகுமார், பேரூர் மாணவரணி அமைப்பாளர் கிட்டு. தமிழ், பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மனோஜ்,லோகேஷ், அருள்குமார்,வார்டு செயலாளர்கள் இராஜ. பாஸ்கரன்,கருப்பையா,மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் இந்திராணி தியாகராஜன்,பேரூர் கழக வார்டு செயலாளர்கள், மாவட்ட ,ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் வாழை. தினேஷ் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *