தனியார் நிறுவன குழாயில் ரசாயன கசிவுவல் தீ பற்றியதால்-மின்னல் வேகத்தில் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்கபட்டது..
சென்னை மணலி சாலையில் சிபிசிஎல் என்ற அரசுக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது, இதன் அருகில் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன நேற்று அதிகாலை பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு குழாய் மூலம் மூலப் பொருட்கள் சென்று கொண்டிருந்தபோது அதில் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது,
இதனால் மணலி சாலை பழைய எம்ஜிஆர் நகர் அருகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது தீ விபத்தை அறிந்த தொழிற்சாலை அதிகாரிகள் ரசாயன போக்குவரத்தை உடனே நிறுத்தினர் அருகே இருந்த பொதுமக்கள் சிபிசிஎல் மணலி தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவொற்றியூர் அருகில் உள்ள ஏழு தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்,
அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர்களிலும் தீ பற்றியது டிரான்ஸ்பார்மரில் குளிர்விக்கும் பனணியும் நடைபெற்றது தீ விபத்தை உடனே கண்டுபிடித்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது அந்த பகுதியில் சிபிசிஎல்க்கு சொந்தமான கச்சா எண்ணெய் செல்லும் குழாய்கள் உள்ளன இதற்கு எந்த பாதிப்பும் வராமல் உடனே தீ அணைக்கப்பட்டது,