பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் 2025-26ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதுக்கு ஆர்வமும், தகுதியும் உடையவர் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் .

பெரம்பலூர்.டிச.19. தேசிய பெண்குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீரசெயல் மற்றும் சாதனைகள் புரிந்தவராக இருத்தல் வேண்டும்.பிற பெண் குழந்தைகளின் கல்விக்குஉதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல்மற்றும் தவிர்த்தல், போன்ற ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனைசெய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்குதீர்வு காணுதல் போன்ற தலைப்புகளில் ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள்மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதுபோன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்,உள்ளிட செயல்களில் ஈடுபட்டதற்கான உரிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்,

விண்ணப்பிக்க தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) உரியவிபரங்களுடன் 29.11.2025அன்று மாலைக்குள்விண்ணப்பிக்கலாம்என அறிவுறுத்தப்பட்டது. தற்போது கால அவகாசம்  20.12.2025 அன்று வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தொலைபேசி எண்: 04328-296209. என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன்
விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *