இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கைமான் ஒன்றிய குழு மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் எஸ். எம்.செந்தில்குமார் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார்.

தமிழ் நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜோசப் மாவட்ட முடிவுகள் எடுத்து கூறினார்.தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி அமைக்க முயற்ச்சிற்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து பேசினார்.

தொடர்ந்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்திற்கு புதிய ஒன்றிய தலைவராக ரவி, ஒன்றிய செயலாளராக சேகர், ஒன்றிய துணைத் தலைவராக விஜயகுமார், ஒன்றிய துணைச் செயலாளராக சின்னதுரை, ஒன்றிய பொருளாளராக மருதையன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் வலங்கைமான் – கோவிந்தகுடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

வலங்கைமான் ஒன்றியத்தில் மழையால் பாதிப்படைந்த விவசாய நிலங்களை அதிகாரிகள் கணக்கு எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், குருவாடி கிராமத்தில் இருந்து 15 கிராமத்திற்கு மேற்பட்ட ஊர்களை இணைக்கும் பிரதான சாலையை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ரவி, சேகர் ஆகியோர் தலைமையில் 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கான முயற்சி எடுக்கும் மத்திய அரசை கண்டித்தும், தேசப் பிதா மகாத்மா காந்தி பெயரில் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிப்பதை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆலங்குடி கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *