திருவாரூரில் ஊரக வளர்ச்சி. ஊராட்சி துறை ஓய் ஊதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருவாரூர் மாவட்ட சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வூதியம் பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கை விடப்பட வேண்டும் ஊராட்சி ஒன்றிய பணி ஓய்ஊதியர்களின் வகிப்பு நிதி துணைக்கான வட்டித் தொகையை தாமதம் இன்றி வழங்கிட வேண்டும். உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் புஷ்பநாதன் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மாவட்டத் தலைவர் என். வசந்தன் உள்பட அனைத்து ஓய் ஊதியர்கள் சங்க நிர்வாகிகள் செந்தில் சிவக்குமார் சண்முகம் பாலகிருஷ்ணன் பாலசுப்பிரமணியன் தமிழ்மணி ராமலிங்கம் வாசுதேவன் திருநாவுக்கரசு செல்வராஜ் சுந்தரலிங்கம் தென்னகச் செல்வன் ஜீவபாரதி உஷாராணி மோகன் பாலசுப்பிரமணியன் மனோகரன் சந்திரசேகரன் ஆசைத்தம்பி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.