பாலின பாகுபாடு இல்லா சமூக நீதிக்கான பாதுகாப்பு திட்ட அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் பாலின பாகுபாடு இல்லா சமூக நீதிக்கான பாதுகாப்பு திட்டம் மூலம் பணியிட பாதுகாப்பு, பெண் கல்வி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் மற்றும் போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் திட்ட துவக்கவிழா விருதலைபட்டி ஊராட்சியில் நடைபெற்றது.

அமைதி அறக்கட்டளையின் பணியாளர் சசிகலா வரவேற்றார். அமைதி அறக்கட்டளை சமூக நலன் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பவித்ரா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அமைதி அறக்கட்டளையின் தலைவரும், நிதி ஆயோக்குழு உறுப்பினருமான ரூபபாலன் துவக்க உரை ஆற்றினார். அமைதி அறக்கட்டளை மேலாளரும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான சீனிவாசன் திட்ட அறிமுகம் குறித்து பேசினார்.

சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் சுதா பேசியபோது- பெண்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள் குறித்தும், குடும்ப வன்முறை குறித்த சட்டங்கள் குறித்தும் பேசினார். சகி ஒருங்கிணைந்த சேவை மையம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மைய நிர்வாகி ஜான்சிராணி- பெண்கள் வன்கொடுமை பாதுகாப்பு உதவி எண் 181 பற்றி பேசினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் ராம்குமார்- பெண்கள் சார்ந்த சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார்.

பசுமை வானொலி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, அமைதி ஐடிஐ பயிற்சியாளர் ஜோதிமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விருதலைப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியை முத்தமிழ் செல்வி, ஆசிரியர் தங்க ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஒருங்கிணைப்பாளர் சங்கீதா பெண் கல்வி குறித்து சிறப்புரை ஆற்றினார். பணியிட பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி பெண்கள் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்து கருத்துரை ஆற்றினார்.

ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி ஆண், பெண் குழந்தைகளை சமமாக வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். நிகழ்ச்சி நிறைவாக ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி நன்றி கூறினார். நிகழ்ச்சியை தன்னார்வலர்கள் பொன்னரசி, உமா மகேஸ்வரி, மீனாட்சி, அமுதா ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *