புளியங்குடி அருகே தென்காசி மாவட்ட தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்
சங்கத்தின் மாவட்ட மாநாடு;-

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே
சிந்தாமணியில் தெலுங்கு யாதவர் சமுதாய திருமண மஹாலில் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்
சங்கத்தின் தென்காசி மாவட்ட மாநாடு மாநில தலைவர் ரத்தினமாலா, மாநில பொதுசெயலாளர் டெய்சி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அழைப்பாளராக ஈ. ராஜா கலந்து கொண்டு சிறப்பு வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாநில இணை செயலாளர் (பொறுப்பு) சரஸ்வதி தலைமையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது.

அதில் தென்காசி மாவட்ட தலைவராக பொன்மலர்,
மாவட்ட செயலாளராக மணிமேகலை, மாவட்ட பொருளாராக வாசு வட்டார காளியம்மாள் ஆகியோரை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்தனர்.

இந் நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *