விருதுநகரில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்க நாடார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அல்லம்பட்டி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வளர்ச்சி மன்றம் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சங்கரலிங்க நாடார் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

தியாகி சங்கரலிங்க நாடாரை பற்றி லூர்து நாடார் கூறும்போது;-

மதராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்டதை தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று
76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களுடைய 129 வது பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்வதில் பெருமை கொள்கின்றோம்

விருதுநகர் அருகே உள்ள மண்மலை மேடு என்ற ஊரில் பிறந்து மும்பையிலே சில காலம் வாழ்ந்து தேசத்தின் மீது பற்று கொண்டு சுதந்திர தாகம் எடுத்து காந்தியடிகளின் நண்பராக சீடராக இருந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் தான் சங்கரலிங்க நாடார் மேலும் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசுக்கு கோரிக்கை வைத்து உண்ணா விரதத்தை தொடங்கினார்

சில நாட்கள் கழித்து சங்கரலிங்க நாடார் உடல்நிலை பாதிக்கப்பட்டதை கேள்வி பட்டு மபொசி பெருந்தலைவர் காமராஜர் ஜீவானந்தம் போன்ற தேச பற்றாளர்கள் சங்கரலிங்க நாடாரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்கள் இருப்பினும் தான் கொண்ட கொள்கையில் உறுதிபட நின்று தன் உயிர் போனாலும் பரவாயில்லை தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று தொடர்ந்து உண்ணா விரதமிருந்து தன் உயிரை தமிழுக்காக கொடுத்த அந்த மாமனிதனுடைய இந்த பிறந்த நாளில் அவருக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பிலும் அல்லம்பட்டி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வளர்ச்சி மன்றம் சார்பிலும் மரியாதை செய்வதில் பெருமை கொள்கிறோம் என்றார்கள் இந்த நிகழ்ச்சியில்
மணி சுதா பாண்டியன் முனியசாமி மாணிக்கம் பாலசுப்ரமணியன் வெள்ளைச்சாமி ஜார்ஜ் அந்தோணி மாடசாமி பரமசிவன் வேலுச்சாமி கபிலன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *