வலங்கைமான் பேரூராட்சியில் சாஸ்திரி ரோடு, கீழத்தெரு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரை கூட்டங்கள் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சாஸ்திரி ரோடு சோம. மாணிக்கவாசகம் இல்லத்தில் திமுக சார்பில் பாகம் 31-க்கான என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் தலைமை வகித்தார்,

பேரூர் திமுக அவைத் தலைவர் சோம.மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூர் திமுக பொருளாளர் எஸ்.புருஷோத்தமன், பேரூர் துணை செயலாளர் வி.சி.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வருகின்ற 2026 பொது தேர்தலில் அனைவரும் அயராது உழைத்து நமது கழகத்தை மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

வலங்கைமான் பேரூராட்சி கீழத்தெரு வில் உள்ள கதிரவன் இல்லத்தில் பாகம் 37- க்கான என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் தலைமை வகித்தார், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி பாஸ்கர், கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், மாவட்ட பிரதிநிதி எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வருகின்ற 2026 பொது தேர்தலில் அனைவரும் அயராது உழைத்து நமது கழகத்தை மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *