வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
ரோல்பால் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்கள்.
உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை துபாயில் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கை சேர்ந்த பயிற்சியாளர் பிரேம்நாத்தின் மாணவர் தீபக் ராஜா மற்றும் மாணவி மதுநிதா ஆகியோர் இந்திய அணி சார்பாக பங்கேற்றனர்.
அப்போட்டியில் இந்திய பெண்கள் அணி கென்யா உடன் 3:2 என்ற விகிதத்திலும், ஆண்கள் அணி கென்யாவுடன் 11 :10 என்ற விகிதத்திலும் கென்யாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இரண்டு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று திண்டுக்கல் மாவட்டத்திற்கும் , தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.