துறையூர் டிச-19
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.துறையூர் எம்எஸ்கே மஹாலில் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் 16-12-2025 அன்று பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணன் மற்றும் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு பூத்து கமிட்டி செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மனோகர் ராஜன்,துறையூர் சட்டமன்ற அமைப்பாளர் பொறியாளர் டி.தனபால் ,துணை அமைப்பாளர் பி.சித்ரா,பொறுப்பாளர் சேது அரவிந்த் மற்றும் மண்டல் தலைவர்கள் ராதாகிருஷ்ணன்,விநாயக மூர்த்தி ,மணி,சிவநேச பாண்டியன்,மோகன்ராஜ், மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் தொழில் தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்